NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ள மகாராஜா திரைப்படம்..!

முன்னணி நடிகர்களின் முக்கியமான திரைப்படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுவதினால் அவற்றை பெரிய அளவில் ப்ரோமோஷனும் செய்து அதிக திரையில் திரையிடுகின்றனர். அவ்வாறே மகாராஜா திரைப்படதுக்கும் நடந்துள்ளது.

மகாராஜா திரைப்படத்தை நித்திலன் சுவாமிநாதன் எழுதி இயக்குகிறார். குறித்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

விஜய்சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ தமிழ்நாட்டில் – 450, மற்ற மாநிலங்களில் – 750, வெளிநாடுகளில் – 800 என மொத்தம் 2,000 திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Share:

Related Articles