NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘2,000 ரூபாய்க்கு அதிகமாக உடைக்கு செலவு செய்ய மாட்டேன்’ – மிருணாள் தாகூர்

குறுகிய காலத்திலேயே இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் மிருணாள் தாகூர்.

இந்த நிலையில் பணத்தை சேமிப்பது, சிக்கனமாக இருப்பது போன்ற விஷயங்களை மிருணாள் தாகூர் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் நடிக்க வந்தேன். பொருளாதார ரீதியாக பல கஷ்டங்களை எதிர்கொண்டேன். இதுவரை டிசைனர் உடைகளை வாங்கியதே இல்லை.

டிசைனர் உடைகளை வாங்கியதே இல்லை. பிடித்த உடைகளுக்காக அதிக அளவில் பணம் செலவு செய்தாலும் அவற்றை ஒருமுறை மட்டும்தான் உபயோகிக்க முடியும்.

சினிமாக்கள், படவிழாக்கள், பார்ட்டி, இன்டர்வியூக்களுக்காக நான் இப்போதுகூட உடைகளை வாடகைக்கு எடுத்து உடுத்திக்கொண்டு செல்கிறேன்.

நிறைய பேர் இந்த முறையை கடைப்பிடிக்கிறார்கள். சொந்தமாக உடைகள் வாங்க 2,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய மாட்டேன்” என்றார்.

Share:

Related Articles