NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

3 பாகங்களாக உருவாகும் “மகாபாரதம்”

பிரபல இயக்குநர் “விவேக் அக்னிகோத்ரி” மகாபாரத கதையை இயக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட எழுத்தாளரான S.L பைரப்பாவின் கன்னட நாவல் பர்வாவைத் தழுவி இந்தப் படம் உருவாகிறது. 3 பாகங்களாக உருவாகும் இதில் நடிப்பவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஏற்கெனவே, நடிகர் ஆமீர்கான் மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்ட படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

இயக்குநர் ராஜமவுலியும் மகாபாரதத்தைப் படமாக்க ஆசை இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அது 10 பாகங்கள் கொண்ட படமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

M.D வாசுதேவன் நாயரின் நாவலின் அடிப்படையில் உருவாக இருந்த மகாபாரதக் கதையில் மோகன்லால் நடிக்க இருந்தார். இயக்குநர் நிதேஷ் திவாரி, ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணக் கதையைத் திரைப்படமாக்க இருக்கிறார்.

Share:

Related Articles