NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

6 நாளில் இவ்வளவு தான் வசூலா.. வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’

வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு ஹீரோ நாக சைதன்யா நடித்து சமீபத்தில் வெளியான படம் கஸ்டடி. க்ரித்தி ஷெட்டி, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் அதில் நடித்து. இருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வெளியானாலும் விமர்சனங்கள் எதிர்பார்த்த வகையில் இல்லாததால் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கஸ்டடி படத்திற்கு 6 நாட்களில் இந்தியாவில் வந்திருக்கும் நெட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இன்னும் 10 கோடியை கூட தொடவில்லையாம். ரெஸ்பான்ஸ் சரியாக இல்லாததால் இந்த படத்தை இன்னும் சில தினங்களில் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால் கஸ்டடி படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைய அதிக வாய்ப்பிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.  

Share:

Related Articles