அருள்நிதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம்.
கெளதம் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.
படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் பாராட்டு மழையை பொழிந்தார்கள். ஆனால், வசூலில் இப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ரூ. 1 கோடி முதல் ரூ. 1.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது என தெரிவிக்கின்றனர்.