NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

AI தொழில் நுட்பத்தில் மதன் கார்க்கி உருவாக்கியுள்ள இசை Album!

கவிஞர் வைரமுத்து மகனான மதன் கார்க்கி திரை உலகில் பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகங்கள் கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.

பல படங்களுக்கு பாடல்களை எழுதி வரும் மதன் கார்க்கி தற்போது ‘முடிவிலி’ என்னும் புதிய இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இது பற்றி மதன் கார்க்கி கூறியதாவது:-

நான் உருவாக்கியுள்ள முடிவிலி ஆல்பத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. காதல் சம்பந்தப்பட்ட பாடல்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் கிராமிய காதல், நகர காதல் என முழுவதும் காதலை மையமாகக் கொண்டு ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆல்பத்திற்கு நானே இசையமைத்துள்ளேன். ஆல்பத்தில் சிறப்பு அம்சமாக பாடலை பாடகர்கள் பாடவில்லை. முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் 10 பாடல்களையும் உருவாக்கியுள்ளேன். தமிழகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு இசை ஆல்பம் முழுவதும் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

Share:

Related Articles