All We Imagine As Light என்ற இந்திய திரைப்படம் பல சர்வதேச உயரிய விருதுகளை பெற்றது.
மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டுகளை பெற்ற திரைப்படமாகும்.
இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வெளியானது.
இத்திரைப்படத்தை பாயல் கபாடியா இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கனி கஸ்தூரி, திவ்ய பிரபா, சாயா கதம் மற்றும் ஹிருது ஹரூன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2024 Cannes Film Festival உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. 1994ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு இந்திய திரைப்படம் இந்த விருதை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பலரும் இப்படத்தின் OTT ரிலீஸ் எப்போது என காத்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் படத்தின் OTT ரிலீஸ் திகதிஅறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
திரைப்படம் வரும் ஜனவரி 3 ஆம் திகதி Disney Plus Hotstart OTT தளத்தில் வெளியாகவுள்ளது.