NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Animal’படத்தின் முதல் நாள் வசூல் என்ன?

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் ஆகியோரின் நடிப்பில் உருவான ‘Animal’ நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. 

படம் வெளியான பிறகு முதல் காட்சியிலேயே கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது.  இதற்கு முக்கிய காரணம் படத்தின் நீளம் தான். 3.21 மணி நேரம் ஓடிய படத்தில் பாதிக்கும் மேல் அதிக வன்முறை காட்சிகள் தான் நிறைந்திருந்தது.

ரத்தம் தெறிக்க தெறிக்க இருந்த இப்படம் Bollywood ரசிகர்களுக்கு திருப்தியாக இருந்தாலும் சில விஷயங்கள் ரசிக்கும் வகையில் இல்லை என்பது தான் உண்மை. 

‘Animal’ படத்தின் அதிகாரபூர்வமான வசூல் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி இப்படம் 116 கோடிகளை (இந்திய பெறுமதி) தட்டி தூக்கி இருக்கிறது. விடுமுறை இல்லாத நாட்களில் வெளிவந்த போதிலும் இந்த அளவுக்கு Animal வசூல் சாதனை படைத்திருப்பது கொஞ்சம் மிரள தான் விட்டிருக்கிறது.

Share:

Related Articles