நடிகை ‘கங்கனா ரணாவத்’ ”பெண்களின் கண்ணியத்தை போக்கும்வகையில் சமீபத்திய படங்கள்’ வெளியாகின்றன என்று குறிப்பிட்டிருந்தார். இதைக் குறிப்பிட்டு பேசிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா,
“கங்கனா ரணாவத் திறமையான நடிகைகளில் ஒருவர் அவர் எனது படத்தை விமர்சித்திருப்பதால் எனக்கு கோபமோ, வருத்தமோ இல்லை.
எதிர்காலத்தில் நான் இயக்கப்போகும் படத்தில் கங்கனா ரணாவத்தை நடிக்க வைப்க முயற்சி செய்வேன்” எனத் தெரிவித்திருந்தார். தற்போது இதற்கு பதிலளித்துள்ள கங்கனா,
“தயவு செய்து உங்களின் படங்களில் என்னை நடிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள். அப்படி நடிக்க வைத்தால் ஆணாதிக்கவாதியாக நடிக்கும் உங்களின் கதாபாத்திரங்கள் பெண்களை போற்றுபவர்களாக மாறிவிடுவார்கள். அது உங்களின் படத்திற்குத்தான் நல்லது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.