NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Arnavவை எச்சரித்த விஜய் சேதுபதி

Big Boss Season 8 வீட்டில் இருந்து அர்னாவ் வெளியேற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் வெளியில் வந்து விஜய் சேதுபதி உடன் பேசும்போது மோசமான ஒரு விஷயத்தை செய்தார்.

Big Boss மேடையில் நின்று வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் பேசும்போது அவர் ஆண்களை மோசமாக பேசினார்.

‘டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க. அப்படியே சேர்ந்து என்னை ஒதுக்கிடீங்க’ என அவர் பேச, எல்லோரும் ஷாக் ஆனார்கள்.

‘இது அநாகரீக பேச்சு. உங்க வன்மத்தை கக்காதீங்க. இப்படி எல்லாம் பேச கூடாது’ என சொல்லி விஜய் சேதுபதி அவரை எச்சரித்தார்.

“உங்க எலிமினேஷனுக்கு ஆண்கள் டீம் காரணம் இல்லை. உங்களை நாமினேட் செய்தது பெண்கள் டீம். ஓட்டு போட்டது வெளியில் இருக்கும் மக்கள்.

அதனால் நீங்கள் வெளியில் வர ஆண்கள் டீம் எந்த விதத்திலும் காரணம் இல்லை” என சொல்லி விஜய் சேதுபதி அவருக்கு விளக்கம் கொடுத்தார். 

Share:

Related Articles