NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Big Boss நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் கமல்

கடந்த 2017ஆம் ஆண்டு பிரமாண்டமான முறையில் விஜய் TVயில் ஆரம்பமாகிய நிகழ்ச்சி தான் ‘Big Boss’ தொடர்ந்து 7 சீசன்களாக வெற்றிகரமான முறையில் நடைபெற்று வருகிறது.

ஆனால், எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு சீசன் 7 மூலம் கமல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். குறிப்பாக பிரதீப் விஷயத்தில் கமல் செய்தது குறித்து ரசிகர்கள் பலரும் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதே போல் நெட்டிசன்கள் பலரும் கமலை கிண்டல் செய்து பல விஷயங்களை செய்து வரும் இந்த சமயத்தில் கமல் ஒரு அதிரடி முடிவு செய்துள்ளாராம்.

இனி வரும் அடுத்தடுத்த Big Boss சீசன்களை கமல் தொகுத்து வழங்கப்போவதில்லையாம். Big Boss 7 தான் கமல் ஹாசனின் கடைசி சீசன் என்று கூறப்படுகிறது.

Share:

Related Articles