NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Big Boss” பிரதீபிற்கு வாய்ப்பு கொடுத்த Vijay TV

“Big Boss” நிகழ்ச்சியை சிலர் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாக பார்த்தாலும் பல கலைஞர்கள் தங்களின் எதிர்க்காலத்திற்கான ஒரு பாதையாக தான் பார்க்கிறார்கள்.

அப்படி சினிமாவில் சில படங்கள் நடித்தாலும் படம் இயக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர் தான் பிரதீப்.

இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் “Big Boss” வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குற்றம்சாட்டப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

Red card கொடுக்கப்பட்டு Big Boss நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் தற்போது பீரதீப்பிற்கு Vijay TV ஒரு புதிய வாய்ப்பு கொடுத்திருப்பதாக தகவல வந்துள்ளது.

இயக்குநர் கனவோடு இருக்கும் பிரதீப்பை Web தொடர் இயக்க கதை கேட்டு இருக்கிறார்களாம், அதற்கான பணியில் தற்போது பிரதீப் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles