NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Big Boss” Season 8 எப்போது?

Bollywood சின்னத்திரையின் Big Boss பிரம்மாண்டமாக ஓடிய தாக்கம் கடந்த 2017ம் ஆண்டு முதல் Season தமிழில் தொடங்கப்பட்டது. முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த அமோக வரவேற்பு அடுத்தடுதது சீசன்கள் ஒளிபரப்பாகி கடைசியாக 7வது சீசன் வரை முடிந்துள்ளது. விரைவில் 8வது சீசன் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முதல் 5 சீசன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குவார் என்ற ஒப்புதலுடன் தான் நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறது.

பின் 6, 7 சீசன்களையும் அவரே தொகுத்து வழங்கி கலக்கினார். தற்போது குழுவினர் சமீபத்தில் 8வது சீசனிற்காக கமல்ஹாசனுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் அவர்களும் 8வது சீசனிற்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளாராம். புரொமோ ஷுட் தொடங்கும் நாள், நிகழ்ச்சி ஆரம்பம் என எல்லா விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளதாம்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து பிக்பாஸ் வீடு அமைக்கும் பணி தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி போல பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான First Look வெளியாகலாம் என தகவல்கள் வருகின்றன.  

Share:

Related Articles