NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bigg Bossல் பாதுகாப்பு இல்லை- பிரதீப்

Bigg Boss 7ம் Seasonல் பிரதீப் கூறிய பல கருத்துக்கள் சர்ச்சையாகி இருக்கிறது.  

இன்று Bigg Boss கடனை திருப்பி அடைக்க Wail Task ஒன்றை கொடுத்தார். அதில் தோற்றுவிட்டால் வீட்டில் இருக்கும் மேக்கப் பொருட்கள் எல்லாம் எடுத்து செல்லப்படும் என அறிவித்தார்.

அப்படி என்றால் நாம் தோற்றுவிடலாம், பெண்கள் மேக்கப் இல்லாமல் அசிங்கமாக இருப்பார்கள், அவர்களால் ஷோவில் ஜெயிக்க முடியாது என பிரதீப் கூறினார்.

இதை கேள்விப்பட்ட பெண் போட்டியாளர்கள் பூர்ணிமா உள்ளிட்ட சிலர் பிரச்னையை எழுப்பி இருக்கின்றனர். கமல் வரும் போது கூட இது பற்றிய விவாதம் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரதீப் மற்றொரு போட்டியாளரிடம் பேசும்போது “எனக்கு தூக்கம் வரவில்லை. எனக்கு Bigg Boss வீடு பாதுகாப்பாக உணரவில்லை, என்னை சுற்றி சாவடிக்கிற ஆட்கள் தான் இருக்கிறார்கள்” என கூறி இருக்கிறார்.

Share:

Related Articles