Bigg Boss சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து அன்ஷிதா வெளியேறிய நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர்.
Bigg Boss சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி உரையாடினார்.
Bigg Boss பிக் பாஸ் வீட்டில் இருந்து ராணவ் வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அன்ஷிதா குறைந்த வாக்குகளைப் பெற்றதாக வெளியேற்றப்பட்டார்.
13வது வாரத்தில் 85வது நாளான இன்று பிக் பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். மக்கள் மனங்களை வென்று முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், செளந்தர்யா மற்றும் மஞ்சரி ஆகியோர் வலுவான இடத்தில் உள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து பவித்ரா ஜனனி, ரயான், ராணவ், வி.ஜே. விஷால், அருண் பிரசாத் ஆகியோர் Bigg Boss வீட்டில் உள்ளனர்.
இவர்களில், Bigg Boss வீட்டில் இருந்து ஆட்டத்தை தொடர விரும்பாமல், பணப் பெட்டியுடன் வெளியேறும் நபர் யார் என்பது அடுத்த வார தொடக்கத்தின்போது தெரியவரும். பிக் பாஸ் போட்டி இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதால், நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதோடு மட்டுமின்றி வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே அதிக புரிதல்கள் ஏற்பட்டுள்ளதால், சச்சரவுகள் குறைந்து பொழுதுபோக்கு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
Bigg Boss பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதன் பிறகு 4வதுவாரத்தில் வைல்டு கார்டு மூலம் 6 போட்டியாளர்கள் நுழைந்தனர்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். Bigg Boss நிகழ்ச்சி இறுதிக்கட்டத்துக்கு இன்னும் 3 வாரங்களே உள்ளன.