NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bollywood நடிகர் “தலிப் தாஹிலுக்கு”2 மாதம் சிறை

பிரபல Bollywood நடிகர் தலிப் தாஹில். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில், சூர்யா நடித்த ‘அஞ்சான்’, ரஜினியின் ‘தர்பார்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு, மும்பை கர் பகுதியில் மதுபோதையில் கார் ஓட்டி, முச்சக்கர வண்டி மீது மோதினார். இதில் முச்சக்கர வண்டியில் இருந்தவர்கள் காயமடைந்தனர்.

தலிப் தாஹில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடினார். ஆனால் விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக, அவரை போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு மும்பை Magistrate நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் தலிப் தாஹில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 2 மாதம் சிறைத்தண்டனை வழங்கி இப்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles