NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆகிவிட்டதா?

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். திருமணத்திற்கு முன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.

கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆர்த்தயாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராய் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Bollywood திரையுலகினர் குறித்து சர்ச்சைகளை கிளப்பி வரும் உமைர் சந்து, நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆகிவிட்டது என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால், அது உண்மையில்லை. நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவருடன் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வருகிறார். இது வெறும் வதந்தி தான் என கூறப்படுகிறது. இதுபோன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறப்படுகிறது. 

Share:

Related Articles