NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகை கியாரா அத்வானி அதிர்ச்சி முடிவு

பிரபல பாலிவுட் நடிகையான கியார அத்வானி, 2014 ஆம் ஆண்டு வெளியான ஃபக்ளி படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்எஸ் தோனி மூலம் பெரும் பிரபலமானார். தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார் கியாரா அத்வானி. மேலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் கியாரா.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் ஆர்சி 15 படத்தில் நடித்து வருகிறார் கியாரா அத்வானி. இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலரான பிரபல பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய் சல்மாரில் உள்ள சூர்யகர் அரண்மனையில் கோலாகலமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் இவர்களின் திருமணத்தில் பங்கேற்றனர்.

திருமணத்தில் 10 நாடுகளைச் சேர்ந்த 100 வகையான உணவுகள் விருந்தளிக்கப்பட்டன. தனது காதல் மனைவி கியாரா அத்வானிக்கு 2 கோடி ரூபாய் மதிப்பில் வைரக்கல் பதித்த மங்கள்சூத்ராவை அணிவித்தார் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா. திருமணம் முடிந்த கையோடு டெல்லி திரும்பிய சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரா அத்வானியும் அங்கு சில சடங்குகளை செய்து முடித்தனர்.

இந்நிலையில் நடிகை கியாரா அத்வானி திருமணம் முடித்த கையோடு ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளாராம் நடிகை கியாரா அத்வானி. மேலும் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாக போவதில்லை என தெரிவித்துள்ள கியாரா அத்வானி, ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. கியாரா அத்வானியின் இந்த முடிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles