NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Dance Jodi Dance ” Final எப்போது?

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி “Dance Jodi Dance”

முதல் Season வெற்றிகரமாக முடிவடைய இரண்டாவது Season கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பமானது. மொத்தம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சங்கீதா, சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியின் Semi Final ரவுண்ட் நடைபெற்ற நிலையில் April 14 இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம்.

முதல் ஜோடியாக சுரேஷ், ஹேமா பைனலுக்கு முன்னேறிய நிலையில் மற்ற 4 போட்டியாளர்கள் யார் என கடந்த வாரம் உறுதியானது.

  1. சுரேஷ்-ஹேமா
  2. இப்ராஹிம்-அக்ஷிதா
  3. நவீன்-அக்ஷிதா
  4. கௌரி-விவேக்
  5. ஜான் எட்வின்-ரிஷா ஜேக்கப்

இந்த 5 ஜோடி தான் இறுதி நிகழ்ச்சியில் போட்டிபோட இருக்கிறார்கள்.

இதில் Title ஜெயிக்கப்போவது யார், பரிசுகளை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share:

Related Articles