NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

December 1ம் திகதி OTT தளத்தில் வெளியாகிறது ‘தூதா’

தேசிய விருதைப் பெற்ற இயக்குநர் விக்ரம் குமார் கடைசியாக நாக சைதன்யாவை வைத்து “Thank You” படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில், விக்ரம் குமார் அடுத்ததாக ‘தூதா’ என்ற தெலுங்கு Web சீரிஸை இயக்கியுள்ளார். நாக சைதன்யா, ப்ரியா பவானி சங்கர், பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பத்திரிகையாளரான நாக சைதன்யா தன்னைச் சுற்றி நடக்கும் மர்மமான நிகழ்வுகள் மற்றும் கொடூர மரணங்களை எப்படி கண்டறிகிறார் என்பது இந்தத் தொடரின் கதை .

இந்தத் தொடர் “Amazon Prime OTT” தளத்தில் வரும் December 1ம் திகதி வெளியாகிறது. மேலும், தொடரை தெலுங்கு, தமிழ், கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தியில் காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles