NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Emotional ஆன சரிகமப மேடை

Zee தமிழில் மிகவும் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் Reality Show சரிகமப நிகழ்ச்சி.

தங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என பல கலைஞர்கள் போட்டி போட்டு பாட்டு பாடி வருகிறார்கள். சரிகமப 4வது சீசனும் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் அர்ச்சனா கேட்ட ஒரு கேள்வியால் சைந்தவி கண்ணீர்விட்டு அழுது இருக்கிறார்.

அப்போது அர்ச்சனா, சைந்தவியிடம் உங்களது அப்பா உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என கேட்டுள்ளார்.

அதற்கு அழுதுகொண்டே பேசிய சைந்தவி, நான் இன்று இவ்வளவு வளர்ந்து இருப்பதற்கு இப்படி இருப்பதற்கு முக்கிய காரணமே என்னுடைய அப்பா தான்.

நான் செய்யும் விஷயங்களில் சரி எது, தவறு எது என என்னை வழிநடத்துவது அவர்தான். உடனே நிகழ்ச்சியில் தனது அப்பாவை பார்த்ததும் சைந்தவி அவரை கட்டிப்பிடித்து அழுது இருக்கிறார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles