NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Jailer” படம் எப்படி இருக்கிறது?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் "Jailer" தமிழகத்தில் 9 மணிக்கு தான் முதல் Show , எனவே நடிகரின் ரசிகர்கள் பலரும் பெங்களூர் சென்றுவிட்டனர்.

அங்கு காலை 6 மணிக்கே முதல் Show , அதேபோல் சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் ஜெயிலர் FDFS தொடங்கிவிட்டது.

படத்தை காண ஆரம்பித்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Super Starன் Style , நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அனிருத்தின் இசை ஜெயிலர் படத்திற்கு கூடுதல் வெற்றியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

முதல் பாதி பரவாயில்லை இரண்டாம் பாதியில் மிகவும் மோசமாக உள்ளதாக Twitter விமர்சனம் கொடுத்து வருகிறார்கள். மேலும் ஜெயிலர் படம் தோல்வி என்பது போல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

முத்துவேல் பாண்டியாக தரமான Entry ரஜினி கொடுத்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன்மூலம் ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர்.

Share:

Related Articles