NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

July 6 OTT தளத்தில் வெளியாகிறது “ஸ்வீட் காரம் காபி”

Lion Tooth Studios சார்பில் ரேஷ்மா கட்டாலா தயாரித்துள்ள புதிய வெப் தொடர் ‘ஸ்வீட் காரம் காபி’. பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, சுவாதி ரகுராமன் உள்ளிட்ட மூன்று இயக்குனர்கள் இத்தொடரை இயக்கியுள்ளனர்.

மதுபாலா, லக்‌ஷ்மி, சாந்தி பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்தொடர் தமிழில் உருவாகி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் Dub செய்யப்படுகிறது. வரும் July 6 Amazon Prime OTT தளத்தில் இத்தொடர் வெளியாகிறது.

மூன்று தலைமுறையைச் சேர்ந்த மூன்று பெண்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது மனநிலை குறித்து அலசுகிறது இத்தொடர். ஸ்வீட் காரம் காபி’. குறித்து தயாரிப்பாளர் ரேஷ்மா கட்டாலா கூறியதாவது:

‘ஸ்வீட் காரம் காபி’ தொடர் ஒரு குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கும் பிணைப்பை எடுத்துக்காட்டுகிறது. மூன்று வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள் குறித்து பேசும் இத்தொடரை பிஜாய், கிருஷ்ணா மற்றும் சுவாதி ஆகியோர் மிக அழகாக இயக்கியுள்ளனர். லட்சுமி, மது மற்றும் சாந்தி ஆகியோரின் உற்சாகமான நடிப்பு இந்தத் தொடரை முழுமையாக ரசிக்க வைக்கும் என அவர் கூறியுள்ளார்.

Share:

Related Articles