NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணை

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ள லொக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், நவரத்தின கல் ஆகியவை திருடு போய்விட்டதாக சென்னை தேனாம்பேட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுளனர். இவர்களின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதியானது. சுமார் 110 பவுன் வரை தங்க நகைகள் திருடி உள்ளார்கள் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்வர்யா கொடுத்த புகாரில் 60 பவுன் என்று கூறியுள்ளார். ஆனால் கைப்பற்றியது 110 பவுன் நகைகள். சொன்னதை விட அதிக நகைகள் இருப்பதால் , பொலிஸார் ஜஸ்வர்யா ரஜினியிடம் இதற்கான பற்றிச்சீடடை கேட்டு விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles