NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார் !

நடிகரும் தமிழ்த் திரைப்பட இயக்குனருமான மனோபாலா உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது வீட்டில் இன்று காலாமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1970 களில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த இவர் பல மொழிகளில் படங்களை இயக்கியும் பல படங்களைத் தயாரித்தும் உள்ளார்.

பல விருதுகளை சொந்தமாக்கிக் கொண்ட மனோபாலா இயல்பு வாழ்க்கையிலும் பல்வேறு உதவிகளைப் புரிந்த நல்ல மனிதராகவும் அனைவர் மனதிலும் தடம் பதித்தவரானார்.


இன்று இவ்வுலகிலிருந்து அவர் நீங்கினாலும் படைப்புக்களால் என்றும் எம் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருப்பார்.


பூவுலகிலிருந்து நீங்கிய கலைஞன் மனோபாலவுக்கு எமது இரங்கல்கள்.

Share:

Related Articles