NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கங்குவா பட முக்கிய டெக்னீசியன் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

கங்குவா படக்குழு மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் படத்தின் முக்கிய டெக்னீசியன் மரணமடைந்துள்ளார்.கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் (43) இன்று அதிகாலை 2 மணியளவில் கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் உள்ள தனது குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளார்.இந்த தகவல் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவர் கங்குவா படம் மட்டுமின்றி டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த தல்லுமாலா படத்திற்கு எடிட்டராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles