லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் Leo படத்தை இயக்கி வருகிறார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
Leo படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” விஜய்யின் பிறந்தநாளான June 22 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், நிறைய படங்கள் இயக்க வேண்டும். நீண்ட நாட்கள் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற எந்தத் திட்டமும் இல்லை. நான் தற்போது இந்த univars முயற்சித்ததற்கு நடிகர்கள், தயாரிப்பாளரகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம், அது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. NOC வாங்க வேண்டும் என நிறைய குழப்பங்கள் உண்டு.
இந்தunivarskuக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நியாயம் சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன்.
Lcuல் 10 படங்கள் இயக்கிவிட்டு அதிலிருந்து வெளியேறிவிடுவேன். Leo படத்தில் விஜய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் 10 நாட்களில் விஜய் உடனான படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.
மற்ற நடிகர்களுடன் படப்பிடிப்பு இருக்கிறது. விஜய்யை மிஸ் செய்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. lCU க்கு கீழ் ‘Leo’ வருமா என்பதை அறிய காத்திருங்கள்” என்றார்.