OTT தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வீடியோக்களில் புகையிலை பயன்படுத்தும் காட்சிகள் வரும் பொழுது “புகையிலை எச்சரிக்கை வாசகம்” கட்டாயம் இடம்பெற வேண்டும் என இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று உலக புகையில்லா நாளை முன்னிட்டு OTT தளங்களில் புகை பிடிப்பது உள்ளிட்ட புகையிலை சார்ந்த காட்சிகள் வரும் பொழுது கட்டாயம் எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒலி, ஒளி வடிவிலான வீடியோவை குறைந்தபட்சம் 20 நொடிகளுக்காவது கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.