NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTT யில் அறிமுகமாகும் ‘நிதி அகர்வால்’

‘ஈஸ்வரன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிதி அகர்வால். அடுத்து ஜெயம் ரவியுடன் ‘பூமி’, மகிழ் திருமேனி இயக்கிய ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் இப்போதுOTTயில் அறிமுகமாகிறார். OTT ஒன்றுக்காக உருவாகும் Aikido என்ற ஹிந்திப் படத்தில் நிதி அகர்வால் நடிக்கிறார்.

இந்தப் படத்தை அபிஷேக் ஜெய்ஸ்வால் இயக்குகிறார்.இதுபற்றி அவர் கூறும்போது,

“இதுபோன்ற நல்ல கதையை மறுக்க முடியவில்லை. கேட்டதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்துக்காக கால்ஷீட்களை அட்ஜஸ்ட் பண்ண வேண்டும். இப்போது பவன் கல்யாண், பிரபாஸ் படங்களில் நடித்து வருகிறேன். தமிழ், தெலுங்கில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles