NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தி லெஜெண்ட் தான் நம்பர் 1… ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் மாஸ்

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் புகழ் அண்ணாச்சி தி லெஜெண்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஜேடி-ஜெர்ரி இயக்கிய ‘தி லெஜண்ட்’ திரைப்படம் கடந்தாண்டு ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறாத இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், தி லெஜண்ட் கடந்த 3ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து லெஜெண்ட் அண்ணாச்சி போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் மூலம் மக்களிடம் பிரபலமானவர் லெஜெண்ட் அண்ணாச்சி. சரவணா ஸ்டோர்ஸ் குரூப் உரிமையாளர்களில் ஒருவரான அவர், தனது கடை விளம்பரங்களில் நடித்து அப்படியே சினிமாவிலும் ஹீரோவானார். அதன்படி, அவரே சொந்தமாக தயாரித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக தி லெஜண்ட் ட்ரெய்லர் 32 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருந்தது.இந்நிலையில், தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள தி லெஜெண்ட், ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளதாக அண்ணாச்சி ட்வீட் போட்டுள்ளார். புதிய அத்தியாயம் தொடக்கம் என்ற கேப்ஷனுடன் ட்வீட் செய்துள்ளார்.

Share:

Related Articles