NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Pan இந்தியா ஸ்டாருக்கு ஜோடியாகும் திரிஷா

நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய தவறான பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் அவருக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நேரத்தில், தான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க. திரிஷாவின் சினிமா பயணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யுடன் Leo படத்தை முடித்த கையோடு, அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து கமலின் 234வது படத்தில் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது. மேலும் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ‘Ram Part 1’ படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles