தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா, தற்போது RJ. பாலாஜி இயக்கத்தில் தனது 45ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா – திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றம் போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்படும் என சொல்லப்படுகிறது.