NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Satellite உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்து வெளிவரவிருக்கும் மிகப்பெரிய முக்கிய திரைப்படங்களில் ஒன்று The Greatest of All Time (GOAT). தளபதி விஜய் ஹீரோவாக நடிக்க இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, ஸ்னேகா, மோகன், மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து ஜூன் மாதம் படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.இந்த நிலையில் , Goat படத்தின் Satellite உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் Satelite உரிமையை ஜீ நிறுவனம் வாங்கியுள்ளாராம். அனைத்து மொழி Satelite உரிமையையும் ரூ. 93 கோடிக்கு ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் தற்போது பரவலாகி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles