NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

September 12 OTTல்  ‘தலவன்’

இயக்குநர் ஜிஸ் ஜாய் இயக்கத்தில் பிஜுமேனன், ஆசிஃப் அலி நடித்துள்ள மலையாள படம் ‘தலவன்’. இந்தப் படத்தில் அனுஸ்ரீ, மியா ஜார்ஜ், திலீஷ் போத்தன், கோட்டயம் நசீர், ஷங்கர் ராமகிருஷ்ணன், ஜோஜி கே ஜான், தினேஷ், அனுரூப், நந்தன் உன்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தீபக் தேவ் இசையமைத்துள்ளார். அருண் நாராயண் படத்தை தயாரித்துள்ளார். கடந்த May 24 திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

காவல் துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கும் பிஜுமேனனுக்கும், சப் இன்ஸ்பெக்டரான ஆசிஃப் அலிக்கும் இடையிலான அதிகார மோதலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இப்படம் ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பால் ரூ.25 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை பார்த்து நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். இந்நிலையில், இப்படம் வரும் September 12 Sony Live OTTயில் வெளியிடப்பட உள்ளது. படத்தை மலையாளம் தவிர, தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி மொழிகளில் பார்க்க முடியும்.

Share:

Related Articles