NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Super Hero கதையில் Ada Sharma

தமிழில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் தான் நடிகை அடா சர்மா.

தொடர்ந்து, ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளார்.

இந்நிலையில் அடா சர்மா, ஆங்கில படம் ஒன்றில் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “ஒவ்வொரு கதையிலும் வித்தியாசமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். Action கதைகளில் நடிக்க எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். ஏற்கெனவே ‘Camendo 2’ படத்தில் அப்படி நடித்திருக்கிறேன்.

இப்போது, பெண் super Hero கதையில் நடிக்கிறேன். அந்தப் படம் பற்றிய தகவலை இப்போது அறிவிக்க இயலாது. ‘கேரளா ஸ்டோரி’ படத்துக்குப் பிறகு இது வித்தியாசமாக இருக்கும்” என்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles