NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Super Singerல் நிகழ்ந்த நெகிழ்ச்சி தருணம் மனோவை கொண்டாடிய சிறப்பு விருந்தினர்கள்

தமிழ் மக்களிடையே மிகப்பிரபலமான நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும், “Super Singer Junior” நிகழ்ச்சியின் 10 வது Season கோலாகலமாகத் நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் பாடகர் மனோவின் 40 வருட திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில், “Mano Spcial” சுற்று நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மனோவை கௌரவிக்கும் விதமாக, அவருக்காகவே இசைத்துறையிலிருந்து இசையமைப்பாளர் சிற்பி, மால்குடி சுபா, உண்ணிமேனன், கல்பனா முதல், பல இசை மேதைகள் கலந்துகொண்டனர். மேலும் ஒரு சிறப்பாக இதுவரை எந்த ஒரு மேடையிலும் அதிகமாகக் கலந்துகொள்ளாத, திரை ஆளுமை மனோவின் நண்பர், நடிகர் திரு.வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இறுதியாக பாடகர் மனோ, இது என் வாழ்வில் மிக முக்கியமான மறக்கமுடியாத சந்தோச தருணம் என்று தெரிவித்ததோடு, இந்நிகழ்ச்சியில் மிக அற்புதமாகப் பாடிய சஞ்சீவ் எனும் பாடகருக்குத் தனது கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார். கடந்த வார நிகழ்ச்சியின் முழு நிகழ்வின் ஒவ்வொரு நொடியுமே, பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்தது.

ஒவ்வொரு பாடகர்களும், தங்களது திறமையால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்கள். பின்னணி பாடகர்களின் முன்னணி மேடையாகத் திகழும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, பல அற்புத தருணங்களுடன், நெகிழ்வான நிகழ்வுகளும் நிறைந்ததாக இந்நிகழ்ச்சி மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Share:

Related Articles