NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Super Singer குறித்து Super Singer Season 9 யாழினி

Reality ஷோக்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது Vijay TV தான். அதில் ஒன்று தான் Super Singer . பல வருடங்களாக மக்களின் ஆதரவு கொஞ்சம் கூட குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

Super Singer Junior 1, 2 கலந்து கொண்டி 3வது சீசனில் பைனல் வரை வந்தவர் தான் யாழினி. கடைசியாக 9வது சீசன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டிருந்தார்.

அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், நான் குழந்தையாக இருக்கும் போது Super singer நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன், அப்போது அந்த ஆடிஷனில் கலந்துகொண்ட போது நான் யமுனை ஆற்றிலே பாடலை பாடினேன், அப்போது நடுவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஏதோ பேசினார்கள்.

அப்போது என்னை ரிஜக்ட் செய்யப்போகிறார்கள் என நான் நினைக்க அப்படியே நடந்தது. நீ இன்னும் கத்துகிட்டு பாட்டு பாடணும் என்று சொல்லி இருந்தார்கள்.

நான் அதை கேட்டு சோகமாக வெளியே வரும்போது வீடியோ எடுப்பவர்கள் உள்ளே என்ன சொன்னார்கன் என கேட்க நான் நடுவர்கள் பேரி வச்சிட்டு என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க, இனி நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று சொல்லி இருக்கிறேன்.

அந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

என்னுடைய கனவு ஒருநாள் கண்டிப்பாக நிறைவேறும் என்னுடைய பாடல்கள் குறித்து பலரும் பாராட்டுகிறார்கள், ஒருசிலர் நான் குட்டையாக இருக்கிறேன் என்று கிண்டல் செய்கிறார்கள், அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது.

என்னுடைய திறமைக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதற்காகத்தான் நான் இப்போதும் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

Share:

Related Articles