NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

The Family Man 3 – படப்பிடிப்பு நிறைவு!

பிரபல பொலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான வெப் தொடர், ‘The Family Man 3’.

ராஜ் மற்றும் டீகே இயக்கிய இந்தத் தொடர் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாவது சீசன் 2021ஆம் ஆண்டு வெளியானது.

அதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோருடன் சமந்தாவும் நடித்திருந்தார். இதுவும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இதன் 3ஆவது சீசனும் உருவாகி வருகிறது.

இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஷ்மி, ஆஷ்லேஷா தாக்கூர் மற்றும் வேதாந்த் சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் மனோஜ் பாஜ்பாய் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை அதனுடன் பகிர்ந்துள்ளார்.

Share:

Related Articles