NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“The Kerala Story” படத்தை OTT நிறுவனங்கள் வாங்காதது ஏன்?

சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி உட்பட பலர் நடித்த படம், 'The Kerala Story'  ஹிந்தியில் உருவான இந்தப் படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் படம் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் புரிந்தது.

இந்நிலையில் இதை எந்த OTT நிறுவனங்களும் வாங்க முன் வரவில்லை என்ற தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. “இந்தப் படம் திரையரங்குகளில் வசூல் குவித்தாலும் இதன் கதை மற்றும் தலைப்பு குறிப்பிட்ட பிரிவினரிடையே கோபத்தை ஏற்படுத்தும் ஒன்று. அதனால் அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய எதிலும் ஈடுபட விரும்பவில்லை என்பதால் அதை வாங்கவில்லை” என்று முன்னணி OTT தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

Share:

Related Articles