Hollywood படங்கள் என்றாலே பிரமாண்டம் தான். அந்த வகையில் “The Meg 2” தற்போது வெளியாகியுள்ளது.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு குழு கடலுக்கடியில் பல புதிய உயிரினங்களை கடுப்புடிக்க செல்கிறது.
சுமார் 20 ஆயிரம் அடிக்கு கீழ சென்று பார்த்தால் அங்கு வேறு ஒரு குழு அங்கிருந்து சில தாதுப்பொருட்களை எடுக்கிறது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்க, முதல் பாகத்தில் வந்த சீனா கதாநாயகி இதில் இறந்தது போலவும், அவருடைய மகளை ஜேசன் காப்பாற்றி வருவது போலவும் காட்டுகின்றனர்.
படத்தின் Meg சம்மந்தப்பட்ட காட்சிகள் கடைசி அரை மணி நேரம் தான் அதகளம். அதுவரை அங்கும் இங்கும் தான் வந்து செல்கிறது.
CG காட்சிகள் தண்ணீருக்குள் பெரிதாக குறை இல்லை என்றாலும், தண்ணீருக்கு வெளியே அப்பட்டமாக தெரிகிறது. முதல் பாகம் அளவிற்கு ஒரு தெளிவு இல்லை.
மொத்தத்தில் இந்த Meg 2 குடுபத்துடன் பார்க்கலாம், Oppenheimer, interstellar போன்ற படங்களை பார்த்து அதிக தெளிவு உள்ள ஆங்கிலப்பட ரசிகர்கள் என்றால் படத்தை பார்ப்பதை தவிர்த்து விடுவது நல்லது.