NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘The Village’ திரை விமர்சனம்

கடந்த 2022ல் இருந்து தமிழ் சினிமாவில் Web தொடர்களின் ராஜ்ஜியம் துவங்கியது. விலங்கு, சூழல், அயலி, வதந்தி, குயின் உள்ளிட்ட பல Web தொடர்கள் வெளிவந்தது.

அன்று துவங்கி தற்போது வரை தமிழில் நல்லநல்ல Web தொடர்கள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இன்று ‘Amazon Prime’ல் வெளிவந்துள்ள Web தொடர் தான் “The Village”

இந்த வெப் தொடரில் ஹீரோவாக ஆர்யா நடித்துள்ளார்.

மருத்துவராக இருக்கும் ஆர்யா தனது குடும்பத்துடன் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார். அப்போது கட்டியல் என்ற கிராமத்தில் கார் பிரேக் டவுன் ஆகிறது.

இதன்பின் தனது மனைவி மற்றும் குழந்தையை காரில் இருக்க சொல்லிவிட்டு ஊருக்குள் சென்று யாரையாவது உதவிக்கு அழைக்க செல்கிறார் ஆர்யா.

திரும்பி வந்து பார்க்கும்போது ஆர்யாவின் மனைவி, குழந்தை மற்றும் காரையும் காணவில்லை. இதன்பின் என்ன நடந்தது? இதற்கெல்லம் காரணம் என்ன என்பதே தி வில்லேஜ் வெப் தொடரின் கதை.

இந்த வெப் தொடரின் மொத்த Run Time மட்டுமே 4 மணி நேரம் 15 நிமிடம் ஆகும். 2,3,4 மற்றும் 6வது எபிசோட்கள் சற்று தொய்வாக இருந்தாலும் கூட கண்டிப்பாக பார்க்க கூடிய ஒரு முக்கிய தமிழ் Web தொடராக தான் ‘The Village’அமைந்துள்ளது. 

Share:

Related Articles