NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bigg Boss Season 7 – Cook With Comali என்ன Update தெரியுமா?

ஒவ்வொரு சீசனிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான TRP அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த வருடம் ஜனவரி மாதம் தான் 6வது சீசன் முடிவுக்கு வந்தது, உடனே Cook With Comali நிகழ்ச்சியை தொடங்கியிருந்தார்கள்.

இப்போது Cook With Comali நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, எனவே Big Boss வேலைகளில் குழுவினர் இறங்கிவிட்டதாக தெரிகிறது.

தற்போது பிக்பாஸ் 7வது சீசன் அடுத்த மாதம் அதாவது ஜுலை 2வது அல்லது 4வது வாரத்தில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது, ஆனால் இதுவரை நிகழ்ச்சி குறித்து ஒரு அப்டேட்டும் இல்லை.

இந்த சீசனில் போட்டியாளர்களை எப்படி தேர்வு செய்யப்போகிறார்கள் என்றால், இரண்டு செலிபிரிட்டிகள், மக்களுக்கு பரீட்சையமில்லாத இரண்டு செலிப்ரட்டிகள், சின்ன திரையை சேர்ந்த இரண்டு நடிகர்கள், தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் இரண்டு பேர், பொதுமக்களில் இருந்து மூன்று பேர், மாடலிங் துறையை சேர்ந்த இரண்டு பேர், சோசியல் மீடியா பிரபலங்கள் இரண்டு பேர், ஒரு திருநங்கை, சமூக சேவை அல்லது அரசியலை சேர்ந்த இரண்டு பேர், பேச்சாளர்கள் இரண்டு பேர், அயல் நாட்டவர்கள் இரண்டு பேர் மற்றும் நடனம் ஆடுபவர்கள் இரண்டு பேர் என தேர்வு செய்யப்போகிறார்களாம்.

Share:

Related Articles