NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay – Shakur கூட்டணியை உருவாக்க போகும் அட்லீ

அட்லீயின் முதல் Bollywood திரைப்படமான ‘ஜவான்’ சக்கை போடு போட்டு வருவது யாவரும் அறிந்ததே.

தனது அடுத்த படத்தையும் அட்லீயே இயக்க வேண்டும் என்று ஷாருக்கே கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், அட்லீ – கமல்ஹாசன் சந்திப்பு பலரது ஆர்வத்தையும் கிளறிவிட்டிருக்கிறது. இந்தச் சந்திப்பின்போது அட்லீ சொன்ன கதை, கமல்ஹாசனுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். இந்தப் படத்துக்கான திகதிகள் மற்றும் சம்பளப் பேச்சுவார்த்தை கூட நடைபெற்று வருவதாக தெரிகிறது.

தற்போது மற்றொரு பேராச்சரியம் தரும் தகவல் வெளியாகியிருக்கிறது. தனது அடுத்த படத்தை உலக ரீதியில் பதற விடுவதற்கு அட்லீ திட்டமிட்டிருப்பதாகவும் இந்தப் படத்தில் கமல், விஜய் மற்றும் ஷாருக் ஆகிய மூன்று உச்ச நட்சத்திரங்களையும் இணைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் செய்தி மட்டும் உண்மையென்றால், ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகுமே ஸ்தம்பித்துப்போவது நிச்சயம்!

Share:

Related Articles