NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அசுரன் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய ஆசை

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘கேப்டன் மில்லர்’. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து, ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில், நடிகர் சிவராஜ் குமார் பேசியதாவது, கதை சொல்லலாம் இருந்தாலும் பரவாயில்லை. தனுஷ் படம் என்றால் நான் நடிக்கிறேன் என்றேன்.

தனுஷை அவரது முதல் படத்தில் இருந்தே எனக்கு பிடிக்கும். தனுஷிடம் நான் என்னை பார்க்கிறேன். தனுஷ் படத்தை பலமுறை பார்த்துள்ளேன். எனக்கு தனுஷ் பாடல் பாடியுள்ளார்.

தனுஷ் அசைவம் சாப்பிடமாட்டார். அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் எனது மனைவி சாம்பார் செய்து கொடுப்பார்கள். அவரது மகன்கள் வருவார்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். நீங்கள் உலக அளவில் சிறந்த நடிகராக மாறியுள்ளீர்கள்.

இதிலும் அப்படித்தான் நடித்துள்ளார். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஜெயிலர் படத்துக்காக எனக்கு அன்பு கொடுத்ததற்கு நன்றி. அசுரன் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை.

இளம் வயது மற்றும் வயதான தோற்றம் என நடிப்பது மிகவும் கடினம். அதனை தனுஷ் நன்றாக செய்திருந்தார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles