தமிழ் சினிமா உலகில் தற்போது நாடிப்பு ,இயக்கம், இசையமைப்பு என பல துறைகளில் சாதித்து கொண்டிருப்பவர்தான் நடிகர் தனுஷ் , இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இதனை தொடர்ந்து இட்லிக்கடை, குபேரா போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் Tere Ishk Mein என்ற திரை படத்திலும் மேலும் நடித்து வருகிறார். இவற்றை தாண்டி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவர் நடிக்கிறார் என்ற செய்தியும் முன்னதாகவே வெளிவந்திருந்தது.
இந்நிலையில் தற்போது இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானியான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைபடதடகத்தில் நடிக்க இருப்பதாக தற்பொழுது ஒரு உத்தியோக பூர்வ செய்தி வெளிவந்துள்ளது.

இத் திரைப்படத்தினை பிரபாஸின் ஆதிபுருஷ் பட புகழ் இயக்குனர் ஓம் ராவத் தான் இப் படத்தை இயக்க போகிறார். மேலும் இத் திரைப்படத்திற்கு ”KALAAM THE MISSILE MAN OF இந்தியா” எனவும் பெயர் வைத்துள்ளனர்.