NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அல்லு அர்ஜுனுடன் இணையும் சமந்தா

பிரபல இயக்குநர் ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்து ‘ராஜா ராணி’ மூலம் இயக்குநராகி பிரபலமானவர் அட்லி. நடிகர் விஜய்யுடன் இணைந்து தொடர் வெற்றிப் படங்கள் கொடுத்தார்.

இதையடுத்து பாலிவுட்டில் இந்தி நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தை இயக்கினார்.’ஜவான்’ திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தை அட்லி இயக்க இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுன் பிறந்த தினமான ஏப்ரல் 8- ந் தேதி வெளியாகுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

தற்போது, அல்லு அர்ஜுன் புஷ்பா – 2 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. புஷ்பா – 2 வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அட்லீயின் புதிய படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து கதாநாயகியாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் நடிகை சமந்தா ஈடுபட்டு உள்ளார்.அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது ஒரு மெகா பட்ஜெட் ஆக்ஷன், பொழுதுபோக்கு படமாகும்.இப்படத்தில் சமந்தாவுடன் வேறு ஒரு கதாநாயகியும் நடிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.அட்லீ -அல்லு அர்ஜுன் புதிய படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.

Share:

Related Articles