NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆடு ஜிவிதம் படத்திற்காக மூன்று நாள் பட்டினி கிடந்த பிருத்விராஜ்

பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால், கே.ஆர். கோகுல் ஜிம் ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். வெளியாகி மூன்று நாட்களிலே படம் 50 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்பொழுது வசூலில் 70 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.

இவ்வார இறுதியில் ஆடு ஜீவிதம் படம் 100 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமலு , மஞ்சும்மல் பாய்ஸ் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ரூ. 100 கோடி வசூலை குவித்த படங்கள் வரிசையில் ஆடு ஜீவிதம் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

ஆடு ஜீவிதம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தில் வரும் ஒரு நிர்வாண காட்சிக்காக நடிகர் பிருத்விராஜ் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை ஒளிப்பதிவாளர் கே.எஸ். சுனில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

இப்படதிற்காக ஏற்கனவே பிருத்விராஜ் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளித்தார். அதுவும் நிர்வாண காட்சிற்காக பிருத்விராஜ் மூன்று நாள் பட்டினி கிடந்து நடித்து இருக்கிறார்.

அந்த காட்சி எடுக்கும் கடைசி நாளில் தண்ணீர் கூட அவர் குடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான சாப்பாடு மற்றும் தண்ணீர் இல்லாமல் 2 வருடங்களுக்கு மேல் பாலைவனத்தில் இருந்து வாழ்ந்த ஒரு மனிதன் எப்படி இருப்பானோ அதை கச்சிதமாக திரையில் காண்பிக்க வேண்டும் என்பதற்காக உடலை வருத்தி நடித்து இருக்கிறார் பிருத்திவிராஜ். இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் இன்று பலன் கிடைத்து இருக்கிறது.

Share:

Related Articles