NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆதி குணசேகரன் இடத்தை நிரப்ப முடியாமல் கதைக்களத்தில் மாற்றம்!

எதிர்நீச்சல் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு வெள்ளித்திரையில் பெரிய எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

அப்படி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் அதில் நடிக்கும் பலருக்கும் ரசிகர்கள் இடத்தில் பெரிய ரீச் ஏற்படுத்தி கொடுத்துள்ளது, அதில் முக்கியமான ஒருவர் தான் மாரிமுத்து.

30 வருடங்களுக்கு மேலாக அவர் சினிமாவில் இருந்தாலும் சரியான வரவேற்பை பெறவில்லை, ஆனால் இந்த தொடர் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுத்தது.

அதனால் ரஜினி, கமல், சூர்யா என பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

ஆனால் திடீரென நடிகர் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழக்க மக்கள் அனைவருமே ஷாக் ஆனார்கள். இதனால் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக அடுத்து யார் நடிப்பார் என நிறைய குழப்பம் ரசிகர்களிடம் உள்ளது.

வேலராமமூர்த்தி, பசுபதி, ராதா ரவி என பல நடிகர்களின் பெயர்கள் அடிபடுகிறது, ஆனால் இன்னும் யாரும் உறுதியாகவில்லை.

இன்று வந்துள்ள புதிய புரொமோவில் குணசேகரன் கடிதம் எழுதிவிட்டு எங்கேயோ சென்றுவிட்டது போல் தெரிகிறது. அனைவரும் கடிதத்தை கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள், ஆனால் என்ன நடந்தது என்பது இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.

சீரியல் குழு கதைக்களத்தில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளதால் அடுத்த ஆதி குணசேகரனை அவர்கள் இன்னும் தேர்வு செய்யவில்லை என்பது தெரிகிறது.

Share:

Related Articles