ஆதிபுருஷ்’ திரைப்படம் ஹாலிவுட்டிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட கார்ட்டூனைப் போல இருப்பதாக 1987ல் ஒளிபரப்பான ‘ராமாயணம்’ தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் விமர்சித்துள்ளார்.
3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் கடந்த June 16 திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் கிராபிக்ஸ்கள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 1987ஆம் ஆண்டு வெளியான ராமானந்த சாகரின் ‘ராமாயணம்’ தொடரில் ராமர் வேடம் ஏற்று நடித்த Arun Govil ’ஆதிபுருஷ்’ திரைப்படம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக நாம் அனைவரும் அறிந்த மற்றும் விரும்பிய ராமாயணத்தில் என்ன தவறு? சில விஷயங்களை மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஒருவேளை படக்குழுவுக்கு ராமர் மற்றும் சீதை மீது சரியான நம்பிக்கை இல்லை போலும், அதனால்தான் அவர்கள் இந்த மாற்றங்களைச் செய்துள்ளனர்.
ராமாயணம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் அதை எந்த வகையிலும் சிதைக்கக் கூடாது.
ராமாயணத்தை ஹாலிவுட்டிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட ஒரு கார்ட்டூனைப் போல காண்பிப்பது சரியல்ல” என்று கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.