NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியன் 2 OTT விற்பனை இத்தனை கோடியா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

Lyca நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இந்த படத்தில் “Lola VFX” பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இது கமலின் சிறு வயது கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் OTT உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியன் 2 திரைப்படத்தை “Netfilix”நிறுவனம் ரூ.200 கோடிக்கு (இந்திய பெறுமதி) வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது உறுதியானால் முதன் முதலில் OTTக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்ட இந்திய திரைப்படம் ‘இந்தியன் 2’ என்ற பெருமையை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles